கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு – 6 பேருக்கு விளக்கமறியல்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு – 6 பேருக்கு விளக்கமறியல்

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா எடின்பரோ தோட்டத்தில் கடந்த (14) ஆம் திகதி பொங்கல் தினத்தில் இடம்பெற்ற ராமர் பஜனை ஊர்வலத்தின் போது
இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில்
அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அதேபகுதியைச் சேர்ந்த 45 வயதான மாணிக்கம் யோகேஸ்வரன் என்பவர் சிகிச்சைப் பலனின்றி (20) திங்கட்கிழமை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்து தோட்டத்தில் இரு குடும்பங்களு இடையில் பழைய பகை ஒன்றின் காரணமாக பொங்கல் தினத்தில் இராமர் பஜனை ஊர்வலத்தின் போது ஏற்பட்ட சிறு வாய்த்தர்க்கம் முற்றியதில் தனியாக அழைத்துச் சென்று கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

குடும்ப தகராறே கொலையில் முடிவடைந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் இச்சம்பவத்தில் படுகாயமடைந்த நால்வர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலை அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேரை கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 6 பேரையும் நுவரெலியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்ப்ட்டனர்.

இதன்போது இவர்கள் அனைவரையும் எதிர்வரும் (29)ஆம் திகதிவரை விளக்கமரியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார் என குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

Share This