உக்ரெய்ன் தலைநகரை இலக்கு வைத்து ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் – ஒருவர் பலி
உக்ரெய்ன் தலைநகரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் எழுவர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதல் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலில் கிய்வ் முழுவதும் உள்ள கட்டிடங்கள் சேதமடைந்ததுடன் தீ பரவியதாகவும் கிய்வின் இராணுவ நிர்வாகத்தின் தலைவர் செர்ஹி பாப்கோ தெரிவித்துள்ளார்.
கிய்வ் மீது ரஷ்யா எட்டு ஏவுகணைகளை ஏவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரெய்னின் தலைநகரில் பாரியளவான குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.