
கிரேட்டர் மான்செஸ்டரில் கத்திக் குத்து! ஒருவர் உயிரிழப்பு
புத்தாண்டு தினத்தில் கிரேட்டர் மான்செஸ்டரில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் ஆண், பெண் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மான்செஸ்டரின் வடக்கே உள்ள டார்ன் டிரைவில் இடம்பெற்ற சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து துணை மருத்துவர்கள் விரைந்தனர்.
எனினும், பாதிக்கப்பட்ட நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை சந்தேகத்தின் பேரில் 20 வயதுடைய ஆணும், பெண்ணும் என இருவரை பொலிஸார் கைது செய்து, விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் என்றும், பரந்த பகுதிக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கருதுவதற்கு எந்த காரணமும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
