மினுவங்கொடையில் 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியுடைய போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

மினுவங்கொடையில் 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியுடைய போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

மினுவங்கொடை – உன்னருவ பகுதியில் 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியுடைய போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோனஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடமிருந்து ஹெரோயின் மற்றும் 308 கிராம் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மினுவங்கொடை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share This