
அம்பலாந்தோட்டையில் 2,200 லீற்றர் டீசலுடன் ஒருவர் கைது
அம்பலாந்தோட்டை, மாமடல பகுதியில் உள்ள வீடொன்றில் அனுமதிப்பத்திரமின்றிப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 2,200 லீற்றர் டீசலுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹுங்கம பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்ட டீசல் கையிருப்பும் மேலதிக நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, குறித்த சந்தேகநபர் இன்றைய தினம் (22) ஹம்பாந்தோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.
