மட்டக்களப்பு போரதீவுபற்றில் நீரோடையில் வீழந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

மட்டக்களப்பு போரதீவுபற்றில் நீரோடையில் வீழந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள போரதீவுப்பற்று பகுதியில் நீரோடையில் விழுந்து ஒன்றரை வயதுடைய ஆண்குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (04) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போரதீவுப்பற்று இளைஞர் விவசாயத்திட்டத்தை சேர்ந்த ஒன்றரை வயதுடைய முருகேசு விகான் என்னும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

குறித்த நீர் நிலைக்கு அருகிலுள்ளு வீடு ஒன்றில் உள்ள குழந்தை, சம்பவதினமான நேற்று காலையில் வீட்டில் இருந்து தத்தி தத்தி நடந்து வெளியேறி வீட்டிற்கு அருகிலுள்ள நீரோடை பகுதிக்கு வந்து விளையாடிக்கொண்டிருந்தபோது வாய்க்கால் நீருக்குள் வீழ்ந்து நீரில் மூழ்கியுள்ளது.

இதனையடுத்து குழந்தையை மீட்டு பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொன்று சென்ற நிலையில் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளது என வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, குழந்தையை பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியவசாலையில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

(கனகராசா சரவணன்)

CATEGORIES
TAGS
Share This