
கர்ப்பிணிப் பெண்களுக்கான ஊட்டச்சத்து உதவித்தொகை கொடுப்பனவு இன்று
நிலவும் பேரிடர் சூழ்நிலை மற்றும் பண்டிகை காலத்தை கருத்திற் கொண்டு, கர்ப்பிணிப் பெண்களுக்கு இன்று (16) முதல் 5,000 ரூபா ஊட்டச்சத்து உதவித்தொகை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஊட்டச்சத்து உதவித்தொகையின் விநியோக நடவடிக்கை இன்று (16) காலை 9.30க்கு வெள்ளவத்தை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி பால்ராஜ்
தலைமையில் நடைபெற உள்ளது.
நவம்பர் 30 ஆம் திகதி வரை மகப்பேறு வைத்தியசாலைகளில் பதிவு செய்த கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
இந்தக் கொடுப்பனவு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்.
CATEGORIES இலங்கை
