நாடளாவிய ரீதியில் தொடர் போராட்டத்திற்கு தயாராகும் தாதியர்கள்

2025 வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (27) நண்பகல் 12 மணிக்கு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளின் முன்பாகவும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அடிப்படை சம்பளத்தில் 1/160 வீதம் வழங்கப்பட்டு வந்த கூடுதல் நேர கொடுப்பனவை 1/200 ஆகக் குறைத்தல், இரண்டாம் தரம் மற்றும் அதற்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு வழங்கப்படும் அரசு விடுமுறை கொடுப்பனவு மற்றும் வாராந்திர ஓய்வு கொடுப்பனவை 1/30 ஆகக் குறைத்தல் மற்றும் பதவி உயர்வு முறையைக் குறைத்தல் ஆகிய பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் போராட்டங்கள் நடத்தப்படுவதாகவும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
தொடர் போராட்டங்களுடன் இணைந்து கருப்பு பட்டி அணிந்து பணி புரிய தீர்மானித்துள்ளதாக சங்கம் கூறுகிறது.