போராட்டத்தில் குதிக்கும் தாதியர்கள்

வரவு – செலவுத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பளத் திருத்தத்தில் தாதியர் சேவைக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி தாதியர்கள் போராட்டத்தில் குதிக்க தீர்மானித்துள்ளனர்.
நாளை வியாழக்கிழமை (27) நண்பகல் 12 மணிக்கு நாடளாவிய ரீதியாக உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும் போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளதாக அரசாங்க தாதியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
வரவு – செலவுத் திட்டத்தில் தாதியர் சேவைக்கு கடுமையான அநீதி இழைத்துள்ளதால் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக கூறும் தாதியர் சங்கங்கள், தமது பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வை வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளன.
தமது பல்வேறு கொடுப்பனவு முறைகளும், மேலதிக நேரத்தக்கான கொடுப்பனவு முறைகளும் குறைக்கப்பட்டுள்ளதாகவும் இவற்றை உடனடியாக அரசாங்கம் திருத்தியமைக்க வேண்டும் என்றும் தாதியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.