
லண்டனில் பாலர் பாடசாலையில் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பணியாளர்- குற்றவாளி என தீர்ப்பு
வடக்கு லண்டனில் பாலர் பாடசாலையொன்றில் பணியாற்றிய ஒருவர், தனது பராமரிப்பில் இருந்த சிறுவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்குற்படுத்தியதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
வுட் கிரீன் கிரவுன் நீதிமன்றத்தில் (Wood Green Crown) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது நீதிமன்றில் முன்னிலையான 45 வயதான நபர் பாலியல் வன்கொடுமை, பாலியல் துஷ்பிரயோகத்தை சித்தரிக்கும் கடுமையான வகை ஆபாசங்களை உருவாக்கல் உள்ளிட்ட 26 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மெட் காவல்துறைக்கு கிடைத்த மிகவும் சிக்கலான வழக்கு இதுவென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தனது பராமரிப்பில் இருந்த குழந்தைகளை இரகசியமாக புகைப்படம் எடுத்து அவற்றை ஆடியோவுடன் இணைத்து வெளியிடும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சந்தேகநபர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனவரி மாதம் 23 ஆம் திகதின்று தண்டனை அறிவிக்கப்படவுள்ளது.
