
கொழும்பில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த வருடம் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க
அளவில் உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
2025 ஜனவரி மாதத்தில் மொத்தம் 4,970 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் கபில கன்னங்கர தெரிவித்தார்.
இருப்பினும், இந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 6,521 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதன்படி, 1,627 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதனைத் தொடர்ந்து கம்பஹா மாவட்டத்தில் 971 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்நிலையில் டெங்கு நோய் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
CATEGORIES இலங்கை
