தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்களின் ஆதரவோடு ஹல்முல்லயில் ஆட்சியமைத்தது என்.பி.பி

தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்களின் ஆதரவோடு ஹல்முல்லயில் ஆட்சியமைத்தது என்.பி.பி

பதுளை, ஹல்துமுல்ல பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் தெரிவான இரு உறுப்பினர்கள் என்.பி.பிக்கு ஆதரவளித்தனர்.

ஹல்துமுல்ல பிரதேசசபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 9 இடங்களைப் பெற்றிருந்தது.

ஐக்கிய மக்கள் சக்திக்கு 6 இடங்களும், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு இரு இடங்களும், பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு இரு இடங்களும், பொதுஜன பெரமுனவுக்கு ஒரு இடமும் , ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஒரு இடமும் கிடைக்கப்பெற்றன.

இந்நிலையிலேயே வாக்கெடுப்பின்போது தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் இருவரும் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்துள்ளனர்.
இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு, கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This