இனி ஹீரோவாதான் நடிப்பேன்…கலையரசன் ஆதங்கம்
நடிகர் கலையரசன் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக மெட்ராஸ் திரைப்படத்தில் வரும் அன்பு எனும் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது.
இந்நிலையில் தற்போது மெட்ராஸ்காரன் எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
மெட்ராஸ்காரன் திரைப்பட விழாவின்போது பேசிய கலையரசன்,
“ஒரு கதாபாத்திரம் சாக வேண்டும் என்று கதை எழுதினால் அதற்கு என் பெயரை தான் எழுதி விடுவார்கள் போல்.
இனி குறிப்பிட்ட கதைகளில் மாத்திரமே துணை நடிகராக நடிப்பேன். மற்றபடி கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன்” எனக் கூறியுள்ளார்.