அரசியலில் இருந்து இன்னும் ஓய்வுபெறவில்லை – சமல் ராஜபக்ச

” நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை. தற்போது நடப்பவற்றை உன்னிப்பாக அவதானித்துவருகின்றேன்.” – என்று முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்தார்.
” அரசியலுக்குள் வந்துவிட்டால் அதனை கைவிடமுடியாது. நான் இன்னும் ஓய்வுபெறவில்லை. தற்போது நடப்பவற்றை அவதானித்துவருகின்றேன். எமக்கு மக்கள் ஆதரவு உள்ளதா என்பதை தேர்தலில் போட்டியிட்டே கண்டறியமுடியும்.”- எனவும் அவர் கூறினார்.
கடந்த பொதுத்தேர்தலில் சமல் ராஜபக்ச போட்டியிடவில்லை. அவரது மகன் சஷீந்திர ராஜபக்சவும் மண்கவ்வினார்.
பல மாதங்களுக்கு பிறகு பொதுவெளிக்கு வந்த சமல் ராஜபக்சவின் அரசியல் நடவடிக்கை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.