ரஷ்யாவுடன் பேச்சு நடத்த தயார் இல்லை – உக்ரைனின் முக்கிய அதிகாரி பகீர் அறிவிப்பு

ரஷ்யாவுடன் பேச்சு நடத்த தயார் இல்லை – உக்ரைனின் முக்கிய அதிகாரி பகீர் அறிவிப்பு

ரஷ்யாவிடம் ஆயுதங்கள், பாதுகாப்பு உத்தரவாதங்கள் மற்றும் சர்வதேச அந்தஸ்து இல்லாதமையால் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையை தொடங்க இன்னும் கீவ் தயாராக இல்லை என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் தலைமை அதிகாரி ஆண்ட்ரி யெர்மக் தெரிவித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை ரொய்டர்ஸுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியில், உக்ரைனையை அழிக்கும் ரஷ்யாவுடன் பேச்சுகள் நடத்த உக்ரைன் தயாராக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

என்றாலும், ஜேர்மன் எதிர்க்கட்சித் தலைவர் ஃபிரெட்ரிக் மெர்ஸுடனான சந்திப்பின் பின்னர் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாகவும், தனது நாட்டை பலப்படுத்தவும், கிரெம்ளினை சமாதானத்தை நோக்கிச் செயல்படக் கட்டாயப்படுத்தவும் முயற்சிகள் தேவை என்றும் கூறினார்.

படையெடுப்பில் கைப்பற்றிய பிரதேசத்தை ரஷ்யா இன்னும் வைத்திருக்கும் நிலையில் இதுதொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என்றும் ஜெலென்ஸ்கி  கூறியுள்ளார்.

என்றாலும், நேட்டோவில் உக்ரைனை இணைக்கும் முயற்சியில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றமானது உக்ரைன் ரஷ்ய போரில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்பாக அமெரிக்காவின் ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ள டொனாட்ல் ட்ரம்ப் போரை விரும்பவில்லை என தெளிவாக கூறியுள்ளதால் உக்ரைனை ரஷ்யாவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளும் அழைப்பை விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு சாதகமான வகையில் கடந்த வாரம் பாரிஸில் கருத்து வெளியிட்ட ட்ரம்ப், போரை விரைவாக முடிவுக்கு கொண்டுவர விரும்புவதாக கூறினார். ட்ரம்பின் கருத்து எவ்வித கலந்துரையாடல்களும் இன்றி வெளியிடப்பட்ட அறிவிப்பாகும் என ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மொஸ்கோ, கிவ் மீது படையெடுப்பை ஆரம்பித்தது. இன்றுவரை இந்தப் போர் தொடர்ந்து இடம்பெறுவதுடன், உக்ரைனில் கைப்பற்றிய சில முக்கிய பகுதிகள் இன்னமும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.

Share This