சில ஆங்கில சொற்களுக்கு தடை – வடகொரிய ஜனாதிபதி

சில ஆங்கில சொற்களுக்கு தடை – வடகொரிய ஜனாதிபதி

மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்தப்படும் சில ஆங்கில வார்த்தைகளை தங்கள் நாட்டினர் பயன்படுத்தக்கூடாது என்று வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் உத்தரவிட்டு உள்ளார்.

அதன்படி, ஹாம்பர்கர் (hamburger), ஐஸ்க்ரீம் (ice cream), கரோக்கி (karoke) உள்ளிட் ஆங்கில சொற்களை பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

சொற்கள் பயன்பாட்டின் போது மேற்கத்திய நாடுகள் மற்றும் தென் கொரியாவின் தாக்கத்தை தவிர்த்த, அதற்கு இணையான அரசு அங்கீகரித்த சொற்களையே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

வட கொரிய ஜனாதிபதி உத்தரவை அடுத்து, அந்நாட்டில் உள்ள அனைத்து சுற்றுலா தல வழிகாட்டிகளுக்கு எந்த சொற்களஞ்சியத்தை பயன்படுத்த வேண்டும் என்று பயிற்சி வகுப்புகளும் தொடங்கி இருக்கின்றன. இந்த வகுப்புகள் 3 மாதங்கள் வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன.

அதிலும், ஐஸ்கிரிம் என்ற வார்த்தைக்கு பதில் எஸ்கிமோ(Eskimo) என்ற வார்த்தையை பிரயோகப்படுத்த வேண்டும் என்றும், ஹாம்பர்கர் என்ற சொல்லுக்கு பதில் இரண்டடுக்கு இறைச்சி துண்டு, துண்டாக வெட்டப்பட்ட ரொட்டி என்று பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Share This