சீனா செல்லும் வடகொரியா தலைவர் – காரணம் என்ன?

சீனா செல்லும் வடகொரியா தலைவர் – காரணம் என்ன?

வடகொரியா, ரஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தொடர்ந்து நட்புறவில் இருந்து வருகின்றன.

இந்நிலையில், சீனா தலைநகரம் பீஜிங்கில் வரும் வாரத்தில் இரண்டாம் உலகப்போர் நினைவு தினத்தை முன்னிட்டு மாபெரும் இராணுவ அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக ரஷிய ஜனாதிபதி புதின் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ரஷிய ஜனாதிபதி புதின், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பை உடனடியாக ஏற்றுக்கொண்டார். ஆனால் வடகொரியா தலைவரின் வருகை உடனடியாக உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில், வடகொரியா அரசாங்கம் சார்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் சீனாவின் அழைப்பை ஏற்று இராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்வார் என உறுதிப்படுத்தப்பட்டது.

அச்சமயத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு பல முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This