நுவரெலியா மாவட்டத்தில் 8 சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் 8 சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு

உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்காக நுவரெலியா மாவட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 18 அரசியல் கட்சிகள் மற்றும் 8 சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக நுவரெலியா மாவட்டத் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 110 வேட்புமனுக்கள் பெறப்பட்டதாகவும், அவற்றில் 18 அரசியல் கட்சிகள் மற்றும் 8 சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும், 97 அரசியல் கட்சிகள் மற்றும் 13 சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் நுவரெலியா மாவட்டத் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் துஷாரி தென்னகோன் தெரிவித்தார்.

வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே திருமதி துஷாரி தென்னகோன் மேலும் இவ்வாறு தெரிவித்தார்.

அத்தோடு, கொத்மலை, மஸ்கெலியா பிரதேச சபைகளுக்கான இ.தொ.காவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை இ.தொ.காவின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், இன்று தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், கொத்மலை, மஸ்கெலியா பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களில் காணப்பட்ட முரண்கள் காரணமாக அவை நிராகரிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.

 

Share This