ஜனாதிபதியின் யாழ் பயணத்திற்கு விமானங்கள் பயன்படுத்தப்படவில்லை
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அண்மைய யாழ் விஜயத்திற்காக மூன்று விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக வெளியான செய்திகள் தவறானவை என்று பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்திற்கு விமானப்படை விமானங்கள் ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை என்பதையும் அமைச்சகம் சுட்டிக்காட்டுகிறது.
ஜனாதிபதி உத்தியோகபூர்வ காரில் பயணம் மேற்கொண்டதாகவும், ஜனாதிபதி விமானங்களைப் பயன்படுத்தியதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் ஆதாரமற்றவை என்றும் அமைச்சகம் அறிவித்துள்ளது.