இந்திய மீனவர்களுடன் இனிப் பேச்சு கிடையாது – அமைச்சர் சந்திரசேகர் திட்டவட்டம்

இந்திய மீனவர்களுடன் இனிப் பேச்சு கிடையாது – அமைச்சர் சந்திரசேகர் திட்டவட்டம்

இந்திய மீனவர்களுடன் இனிப் பேச்சுவார்த்தை கிடையாது என்று கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது கடற்றொழில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் இந்திய மீனவர்களுடன் இனிப் பேச்சுவார்த்தை கிடையாது. பேச்சுவார்த்தை எல்லாம் முடிந்துவிட்டன. இனிப் பேச்சுவார்த்தை இல்லை. யாரோடும் இனிப் பேச்சுவார்த்தை இல்லை.

மீன்பிடி அமைச்சில் உள்ள அதிகாரிகளுக்கும் இந்தியாவில் உள்ள அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. அந்தப் பேச்சுவார்த்தைகள் தொடரும். அது தொழில்நுட்ப ரீதியிலான பிரச்சினைகள் தொடர்பானவை.

இதேநேரம் வேறு விதமான மனிதாபிமான உதவிகளை நாடுவதோ, கொடுப்பதோ தொடர்பில் அப்படியான ஒரு பேச்சுவார்த்தைக்கு நாங்கள் செல்லப்போவதில்லை. இதுதான் எமது மனிதாபிமான நடவடிக்கை என்று நாங்கள் கூறுகின்றோம்.” – என்றார்.

Share This