காசாவில் இனப்படுகொலையில் ஈடுபடும் தரப்புடன் நட்புறவு கிடையாது

காசாவில் இனப்படுகொலையில் ஈடுபடும் தரப்புடன் நட்புறவு கிடையாது

“காசாவில் அரங்கேறும் இனப்படுகொலையை வன்மையாகக் கண்டிக்கின்றோம். வைத்தியசாலைகளுக்கு குண்டுகளைபோட்டு, படுகொலையில் ஈடுபடும் அரச பயங்கரவாத கலாசாரம் முடிவுக்கு வரும்வரை, அந்த தரப்புடன் எமக்கு நட்புறவு கிடையாது. சங்கமும் கிடையாது. இதுதான் எமது நிலைப்பாடு: கொள்கை. எந்தவொரு அழுத்தத்தாலும் எமது நிலைப்பாடு மாறாது.”
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இஸ்ரேல், இலங்கை நட்புறவு சங்கத்தை கட்டியெழுப்புவதற்குரிய அழைப்பை ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்ஹ விடுத்திருந்தார். இது பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியது. பின்னர் அவர் மன்னிப்புகோரி, அதற்குரிய முயற்சியை கைவிட்டார்.
இந்நிலையிலேயே சஜித் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான அவரது உரை கருத்து பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.
CATEGORIES
Share This