
கல்வி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – சஜித் பிரேமதாச தலைமையில் கையெழுத்து
கல்வி அமைச்சராகவும் செயல்படும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று கையொப்பம் இட்டார்.
எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின்னரே அவர் கையொப்பம் இட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தங்கள் மாணவர்களின் மனதிற்கு பொருத்தமற்ற பல விடயங்களையும், பாட அலகுத் தொகுதிகளில் பல்வேறு பிழைகளைக் கொண்டு காணப்படுவது மற்றும் இது தொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டே நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.
ஏனைய எதிரணி உறுப்பினர்களிடம் கையொப்பம் திரட்டும் நடவடிக்கையும் ஆரம்பமாகியுள்ளது.

