முட்டை சார்ந்த உணவுகளின் விலையில் மாற்றமில்லை

முட்டை சார்ந்த உணவுகளின் விலையில் மாற்றமில்லை

முட்டை விலை சடுதியாக குறைவடைந்தாலும் முட்டை ரொட்டி, முட்டை அப்பம் ஆகியவற்றின் விலை குறையாமல் இருப்பது தொடர்பில் பலரும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.

கடந்த நாட்களில் முட்டை ஒன்றின் விலை 58 ரூபாய் தொடக்கம் 60 ரூபாயாக காணப்பட்ட போது, ​​முட்டை ரொட்டி மற்றும் முட்டை அப்பம் ஆகியவற்றின் விலை 130 தொடக்கம் 140 ரூபாயாக அதிகரித்தது.

தற்போது முட்டையின் விலை 30 முதல் 32 ரூபாய் வரை குறைந்துள்ளது.எனினும், முட்டை ரொட்டி மற்றும் முட்டை அப்பத்தின் விலை முன்பு போலவே உள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.

Share This