நிதிஷ் குமார் 10வது முறை​யாக பிஹாரின் முதலமைச்சராகின்றார்

நிதிஷ் குமார் 10வது முறை​யாக பிஹாரின் முதலமைச்சராகின்றார்

பிஹாரில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், நிதிஷ் குமார் 10வது முறை​யாக மீண்​டும் முதல்மைச்சராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், எதிர்வரும் 19ஆம் திகதி பதவியேற்பு விழா ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாரதிய ஜனதா கட்சி தலை​மையி​லான ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி 202 இடங்​களை கைப்​பற்றி அபார வெற்றியை பதிவுசெய்துள்ளது.

இந்நிலையில், பிஹாரில் ஆட்சி அமைப்பது தொடர்பில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் தீவிர ஆலோ​சனை நடத்தி வரு​கின்​றனர்.

பிஹார் முதல்​வரும் ஐக்​கிய ஜனதா தள தலை​வரு​மான நிதிஷ் குமார் பாட்​னா​வில் நேற்று கட்​சி​யின் மூத்த தலை​வர்​களு​டன் ஆலோ​சனை நடத்​தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிஹார் சட்டமன்ற தேர்தலின் புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஐக்​கிய ஜனதா தள கட்சி உறுப்பினர்களின் கூட்​டம் பாட்​னா​வில் இன்று நடை​பெறவுள்ளது.

இந்த கூட்​டத்​தில் ஐக்​கிய ஜனதா தள சட்​டப்​பேர​வைத் தலை​வ​ராக நிதிஷ் குமார் தெரிவுசெய்​யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஆளுனரை சந்​தித்து பதவி விலகல் கடிதத்தை கையளிக்க உள்​ளதுடன், புதி​தாக ஆட்​சி​யமைக்​க​வும் நிதிஷ் குமார் உரிமை கோரு​வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 19ஆம் திகதி  நிதிஷ் குமார் 10வது முறை​யாக மீண்​டும் முதல்மைச்சராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிகழ்வில் பிரதமர் நரேந்​திர மோடி உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This