நிமல் லான்சாவுக்கு பிணை

நிமல் லான்சாவுக்கு பிணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அவர் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, தலா இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன்
அவருக்கு வெளிநாட்டுப் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

நபர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்ட நிமல் லான்சா விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

 

CATEGORIES
TAGS
Share This