நிலந்தி கொட்டஹச்சி சி.ஐ.டியில் முறைப்பாடு

நிலந்தி கொட்டஹச்சி சி.ஐ.டியில் முறைப்பாடு

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாகக் கூறி அவருடைய சட்டத்தரணி மூலம் அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

20,000 ரூபாய் செலுத்தி நிலந்தி கொட்டஹச்சியுடன் ஹோட்டல் ஒன்றிற்கு சென்றதாக, நபர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் அவதூறான பதிவுகளை வெளியிட்டிருந்ததாக சட்டத்தரணி நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இதனால் நிலந்தி கொட்டஹச்சிக்கு ஏற்பட்ட அவதூறுகள் மற்றும் அபகீர்த்திக்காக நீதியை நிலை நாட்ட வேண்டும் என மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கோரியுள்ளார்.

இது தொடர்பில், சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தனது மனுதாரருக்கு எந்தவிதமான தவறான நடத்தைகளும் இல்லை என்றும் அந்த நபரை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை என்றும் கூறியமை குறிப்பிடத்தக்கது.

 

Share This