நிலந்தி கொட்டஹச்சிக்கு ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட தடை

ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
கெசெல்வத்த கிம்பத பிரதேசத்தில் இடம்பெற்ற க்ளீன் ஸ்ரீலங்கா நிகழ்வின் போது ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பும் போது தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தர்ப்பத்தில், “மன்னிக்கவும்.. ஊடகங்களிடம் பேச வேண்டாம் என்று கட்சி எனக்கு அறிவுறுத்தியுள்ளதால், நான் ஊடகங்களுக்கு எந்தக் கருத்தையும் தெரிவிக்க முடியாது.” என நிலந்தி கொட்டஹச்சி கூறியுள்ளார்.
அவர் சமீபத்தில் ஊடகங்களுக்கு அளித்த சர்ச்சைக்குரிய அறிக்கைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.
எவ்வாறாயினும், அறிக்கை வெளியிடப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, டெய்லி மிரர் செய்தித்தளத்தில் வெளியான தவறான மற்றும் பொறுப்பற்ற ஊடக அறிக்கையால் தான் வருத்தமடைவதாக எம்.பி. தனது சமூக ஊடகக் கணக்கில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.