‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’…இம் மாதம் வெளியாகிறதா?
தனுஷ் இயக்கத்தில் வொண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் பவிஷ் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்.
இப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசைமைத்துள்ளார்.
அடுத்தமாதம் 7 ஆம் திகதி இப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் பெப்ரவரி 6ஆம் திகதி வெளியாவதால் இம் மாதம் 30 ஆம் திகதி இப் படத்தை வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது.
ஏற்கனவே இப் படத்தின் கோல்டன் ஸ்பெரோ மற்றும் யெடி பாடல்கள் வெளியாகி வைரலானமை குறிப்பிடத்தக்கது.