நைஜீரியா இராணுவ தளபதி கடத்தி சுட்டுக்கொலை

நைஜீரியாவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தின் சிரேஷ்ட தளபதி பிரிகேடியர் ஜெனரல் மூசா உபா, தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதனை அந்நாட்டு ஜனாதிபதி போலா டினுபு டான் கன்பம் டி உறுதிப்படுத்தியுள்ளார்.
போர்னோ மாநிலத்தின் டம்போவா எல்.ஜி.ஏ, அசிர் முல்டேவுக்காக வஜிரோகோவைச் சுற்றியுள்ள சமூகங்களைப் பாதுகாப்பதற்காக வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சமயம் சிரேஷ்ட தளபதி கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என்று நைஜீரிய இராணுவமும் தெரிவித்துள்ளது.
மேற்கு ஆபிரிக்க நாடான நைஜீரியாவில், போகோ ஹரம், ஐ.எஸ் உள்ளிட்ட பல ஆயுதக் குழுக்கள் செயற்படுகின்றன. போகோ ஹரமில் இருந்து பிரிந்த ஒரு குழு ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து, ஐ.எஸ்.டபிள்யூ.ஏ.பி., என்ற பெயரில் தனியாக இயங்கி வருகின்றது.
இந்த அமைப்பினர், இராணுவ இலக்குகளையே அதிகம் தாக்கி வருகின்றனர். இந்த ஆண்டு மட்டும், 15 தடவைகள் இராணுவ முகாம்களை தாக்கி, படை வீரர்களை கொன்று ஆயுதங்களை கொள்ளை அடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இராணுவ தளபதி எம். உபாவை கடத்தி சென்று கொன்றதாக ஐ.எஸ்.டபிள்யூ.ஏ.பி., தீவிரவாதக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.
ஆனால் இதை நைஜீரிய ராணுவம் மறுத்துள்ளது.
