நியூயோர்க்கில் 150 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு மிக மோசமான பனிப்புயல்

நியூயோர்க்கில் 150 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு மிக மோசமான பனிப்புயல்

அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்களில் கடும் பனிப்புயல் வீசி வரும் நிலையில், அவசர போக்குவரத்து தவிர அனைத்து போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க், நியூ ஜெர்சி, டெலாவேர், மாசசூசெட்ஸ், மேரிலாந்து, கனெக்டிகட், வர்ஜீனியா மற்றும் பென்சில்வேனியா உள்ளிட்ட மாகாணங்கள் பனிப்புயலால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன.

நியூயோர்க்கில் 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான பனிப்புயல் தாக்கி வருவதால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடும் பனிப்பொழிவுடன் தீவிர புயல் வீசுவதால் வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நியூயோர்க்கின் முக்கிய விமான நிலையங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டன.

அதேபோல் அமெரிக்கா முழுவதும் பனிப்புயல் காரணமாக 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )