அரை மாரத்தான் போட்டியில் புதிய உலக சாதனை

அரை மாரத்தான் போட்டியில் புதிய உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
உகாண்டாவைச் சேர்ந்த ஜேக்கப் கிப்லிமோ இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதன் மூலம், 57 நிமிடங்களுக்குள் ஆண்களுக்கான அரை மராத்தான் போட்டியில் வென்ற உலகின் முதல் தடகள வீரர் என்ற சாதனைப் புத்தகத்தில் அவர் இடம்பிடித்துள்ளார்.
ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற்ற அரை மாரத்தான் போட்டியில் 24 வயதான உகாண்டாவைச் சேர்ந்த ஜேக்கப் கிப்லிமோ 56 நிமிடங்கள் 42 வினாடிகளில் ஓடி முடித்தார்.
ஒரு அரை மாரத்தானின் சராசரி தூரம் 21.1 கிலோமீட்டர் ஆகும்.
அதன்படி, இந்த அரை மாரத்தானில் ஒரு கிலோமீட்டரை கடக்க ஜேக்கப் கிப்லிமோ தோராயமாக 2.6 நிமிடங்கள் 8 வினாடிகள் மட்டுமே செலவிட்டார்.
முன்னதாக, எத்தியோப்பிய தடகள வீரர் யோமிஃப் கெஜெல்சா அரை மாரத்தான் போட்டியில் 57 நிமிடங்கள் மூன்று வினாடிகளில் ஓடி உலக சாதனை படைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.