
எரிபொருள் QR பதிவு பிரச்சினைக்கு புதிய வட்ஸ்அப் இலக்கம் – டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம்
எரிபொருளுக்காக QR குறியீட்டை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளோருக்காக டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் விசேட வட்ஸ்அப் இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, பதிவு செய்வதில் சிரமங்களை எதிர்கொள்வோர்,உங்கள் வாகனப் பதிவு எண்ணை TYPE செய்து 076 000 1919 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.
வாகனப் பதிவு எண்ணைப் புகைப்படமாக அனுப்பக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன்,தேசிய அடையாள அட்டை (NIC) / ஓட்டுநர் உரிமம் அல்லது கடவுச்சீட்டு, செல்லுபடியாகும் வாகன உரிமம் (Vehicle License) மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் (CR) போன்ற ஆவணங்களின் தெளிவான புகைப்படங்களையும் அதே இலக்கத்துக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
