ஹப்புத்தளையில் புதிய சுற்றுலா வலயம்

ஹப்புத்தளையில் புதிய சுற்றுலா வலயம்

உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட “சிலோன் டீ” வர்த்தக நாமத்தை விளம்பரப்படுத்துவதன் மூலம் இலங்கைக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில்,ஹப்புத்தளையில்  புதிய சுற்றுலா வலயத்தை நிறுவுவதற்கான திட்டங்களை ஊவா மாகாண சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய ஹப்புத்தளை பிரதேச செயலகத்திற்குள் உள்ள பங்கெட்டிய கிராம சேவையாளர் பிரிவின் கஹகல்ல பகுதியில் சுமார் நான்கு ஏக்கர் பயன்படுத்தப்படாத புல்வெளியை சுற்றுலா வலயத்தை ஆரம்பிப்பதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கஹகல்லே சுற்றுலா வலயம், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளுடன், தேயிலை பாரம்பரிய அருங்காட்சியகம் மற்றும் தாவரவியல் பூங்காவுடன் கூடிய கவர்ச்சிகரமான பகுதியாக மாற்றப்பட உள்ளது.

CATEGORIES
TAGS
Share This