மலேசியாவில் புதிய வகை கொவிட்-19 வைரஸ்

மலேசியாவில் கண்டறியப்பட்ட கொவிட்-19 தொற்றுச் சம்பவங்களில் புதிய வகை வைரஸ் அடையாளம் காணப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஸுல்கிஃப்லி அகமது கூறியுள்ளார்.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 43,087 நோயாளிகளில் கிட்டத்தட்ட 8.2 வீதமானோர் எக்ஸ்எஃப்ஜி (XFG) என்ற புதிய வகை கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
வைரஸ் பரவலைக் கண்காணிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட மரபணுப் பரிசோதனைகள் மூலம் புதிய வகைத் தொற்றைச் சுகாதார அமைச்சு கண்டுபிடித்தது.
அந்த ரகக் வைரஸ் எளிதில் பரவக்கூடியதாக இருக்கிறது என்றும் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கும் தன்மை கொண்டது என்றும் ஸுல்கிஃப்லி அகமது கூறியுள்ளார்.