புதிய சபிரி கிராமிய கடன் திட்டம் – ‘சருசார’ வட்டி நிவாரண திட்டம் அமுல்

புதிய சபிரி கிராமிய கடன் திட்டம் – ‘சருசார’ வட்டி நிவாரண திட்டம் அமுல்

‘புதிய சபிரி கிராமிய கடன் திட்டம் – சருசார’ வட்டி நிவாரண திட்டத்தை 2025 ஆண்டிலிருந்து வருடாந்த நிகழ்ச்சித்திட்டமாக அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

குறுங்கால பயிர்ச்செய்கை மற்றும் வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையில் ஈடுபடும் சிறிய மற்றும் மிகச்சிறிய அளவான விவசாயிகளின் செயற்பாட்டு மூலதனத் தேவையை நிறைவேற்றுவதற்காக ‘சருசார’ புதிய சபிரி கிராமிய கடன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த திட்டம் மத்திய வங்கியின் பிரதேச அபிவிருத்தி திணைக்களத்தினால் 2020 ஆண்டிலிருந்து இற்றைவரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று (27.01.2025) நடைபெற்ற அமைச்சரவையில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவையினால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலத்தில் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட மத்திய வங்கி புதிய சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய அவ்வாறான சலுகை கடன் திட்டங்களை அமுல்படுத்தும் இயலுமை மத்திய வங்கிக்கு இல்லை. இதனால் 2025 ஆண்டிலிருந்து ‘சருசார’ புதிய கிராமிய கடன் திட்டத்தை வருடாந்த நிகழ்ச்சித்திட்டமாக பொதுத் திறைசேரியின் அபிவிருத்தி நிதி திணைக்களத்தின் மூலம் அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This