புதிய ஊரக வேலை உறுதி திட்​டம் – நாடளாவிய ரீதியில் காங்கிரஸ் போராட்டம்

புதிய ஊரக வேலை உறுதி திட்​டம் – நாடளாவிய ரீதியில் காங்கிரஸ் போராட்டம்

இந்தியாவில் புதிய ஊரக வேலை உறுதி திட்​டத்​துக்கு எதி​ராக ஜனவரி 8 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என காங்​கிரஸ் அறி​வித்​துள்​ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு​தித் திட்​டத்​தின் பெயர், விக்‌ஷித் பாரத் கேரன்ட்டி பார் ரோஜ்கர் அண்ட் அஜீவிகா மிஷன் (கி​ராமின்) (ஜி ராம் ஜி) என்று மாற்​றம் செய்​யப் பட்டு உள்​ளது. இந்த புதிய ஊரக வேலை உறு​தித் திட்ட சட்டமூலம் நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களி​லும் நிறைவேற்​றப்​பட்​டது. இதற்கு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு அனுமதி வழங்​கி​னார்.

இந்நிலையில் மகாத்மா காந்தி பெயரை நீக்​கியதை கண்​டித்​தும், சட்டமூலத்தின் குறிப்​பிட்ட அம்​சங்​களை எதிர்த்​தும் காங்​கிரஸ் போர்க்​கொடி உயர்த்தி உள்​ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )