புதிய இலக்கத் தகடுகள் – நவம்பர் 15ஆம் திகதி அறிமுகம்

மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய இலக்கத் தகடுகளை வெளியிடுவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று(26.09.2025) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
புதிய இலக்கத் தகடுகள் நவம்பர் 15ஆம் திகதிக்குள் வழங்கப்படும் என்று அமைச்சர் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இலக்கத் தகடுகள் இல்லாமல் வாகனங்கள் இயங்குகின்றன என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய இலக்கத் தகடுகளை வழங்குவது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம்.
அடுத்த வாரத்திற்குள் ஒரு தற்காலிக தீர்வை அறிமுகப்படுத்துவோம் என்று நம்புகிறோம். ஆனால் இலக்கத் தகடுகளின் பிரச்சினை நவம்பர் 15 ஆம் திகதிக்குள் தீர்க்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.