ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்க புதிய சட்டங்கள்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்க புதிய சட்டங்கள்

திட்டமிட்ட குற்றங்களை கையாள்வதற்கு புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பயங்கரவாத ஒடுக்குமுறைச் சட்டத்தை ரத்து செய்வதற்கான கொள்கை முடிவை அரசாங்கம் தற்போது எட்டியுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கைது செய்யப்படும் திட்டமிட்ட குற்றவாளிகள் பயங்கரவாத ஒடுக்குமுறைச் சட்டத்தின் விதிகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறார்கள் என்று அமைச்சர் கூறினார்.

இந்தச் சட்டம் ரத்து செய்யப்படுவதன் காரணமாக , திட்டமிட்ட குற்றவாளிகளை தடுத்து வைத்து விசாரிக்க புதிய சட்ட விதிகள் தேவை என்று  அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, நீதி அமைச்சின் தலையீட்டால் தற்போது தொடர்புடைய புதிய மசோதா வரைவு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர்  மேலும் தெரிவித்துள்ளார்.

Share This