
வெறுப்புப் பேச்சைக் கட்டுப்படுத்த ஆஸி.யில் புதிய சட்டங்கள்
வெறுப்புப் பேச்சைக் கட்டுப்படுத்த தனது அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த யூத கொண்டாட்டத்தில் நடந்த பயங்கரமான துப்பாக்கிச் சூட்டில் பதினைந்து பேர் கொல்லப்பட்டனர்.
புதிய சட்டங்கள் “வெறுப்பு, பிரிவினை மற்றும் தீவிரவாதக் கருத்துகளை பரப்புபவர்களை” குறிவைக்கும் என அவுஸ்திரேலிய பிரதமர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெறுப்பைப் பரப்புபவர்களுக்கு விசாக்களை ரத்து செய்யவோ அல்லது மறுக்கவோ உள்துறை அமைச்சருக்கு புதிய அதிகாரங்கள் வழங்கப்படும்.
“யூத எதிர்ப்புத் தடுக்கப்படுவதையும், எதிர்த்துப் போராடுவதையும், தகுந்த முறையில் பதிலளிப்பதையும்” உறுதிசெய்ய ஒரு புதிய பணிக்குழு நிறுவப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒவ்வொரு யூத அவுஸ்திரேலியருக்கும் நமது மகத்தான தேசத்திற்கு பங்களிக்க முடியும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
