
மீனவர்களுக்கான புதிய காப்பீட்டுக் கொள்கை – அடுத்த மாதம் அறிமுகம்
மீனவர்கள் எதிர்கொள்ளும் அபாயங்களைக் கருத்திற்கொண்டு, புதிய காப்பீட்டுக் கொள்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் விவசாயிகள் காப்பீட்டு சபையின் தலைவர் பேமசிறி ஜசிங்கராச்சி கூறியுள்ளார்.
இந்த காப்பீடு ஜூலை முதலாம் திகதி டிக்வெல்ல மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.
கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள மீனவ சமூகத்தினர், தங்கள் பணியின் அபாயகரமான தன்மை காரணமாக, உயிருக்கு ஆபத்தான விபத்துக்களுக்கு ஆளாகும் அபாயம் அதிகம் காணப்படுகிறது.
இதன் ஊடாக கடற்றொழிலில் ஈடுபடும்போது சீரற்ற வானிலையால் அல்லது வேறு ஏதேனும் சந்தர்ப்பங்களில் மீனவர்களுக்கு ஏற்படும் விபத்துகள், இயலாமை மற்றும் உயிர் இழப்பு போன்றவற்றின் போது, அவர்களுக்கு இந்த காப்பீட்டுத் திட்டம், நன்மைகளை வழங்கும்.
CATEGORIES இலங்கை
