ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளர் நியமனம்

ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளர் நியமனம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ரட்ணகுமார் நிசாந்தன் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து நியமனப் பொறுப்புக்களை ஏற்றதுடன், பிரதேச செயலகத்தில் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்.

யாழ்ப்பாணம் கமநல சேவைகள் திணைக்களத்தில் பிரதி ஆணையாளராக பணியாற்றிய இவர் ஜனாதிபதி செயலகத்தில் உலக உணவுத்திட்ட பணிப்பாளராக பணியாற்றினார்.

இதனைத் தொடர்ந்து குறித்த பிரதேசத்தின் கடமைகளை இன்று பொறுப்பேற்றுள்ளார்.

நீண்ட பிரதேச எல்லையைக் கொண்ட ஒட்டுசுட்டான் பிரதேச செயலக எல்லையில் பல்வேறு அரச சேவைகளுக்கான தேவைகள் காணப்படுகின்றன.

யுத்தம் நிறைவடைந்து மீள்குடியேற்றப்பட்டு 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் பொதுமக்களின் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.

கடந்த காலங்களில் இருந்த அரசியல் தலையீடுகள், ஊழல்கள் காரணமாக மக்கள் தமது தேவைகளையும், முழுமையான சேவையையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

ஊழலற்ற நேர்மையான அரச சேவை வழங்கக்கூடிய பிரதேச செயலாளரை நியமித்து தருமாறு பிரதேச மக்களால் ஜனாதிபதி உள்ளிட்ட பல தரப்பினருக்கு எழுத்து மூலமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில்,  குறித்த பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Share This