நயன்தாரா – தனுஷ் வழக்கு…ஜனவரி 8 இல் இறுதி விசாரணை
நடிகை நயன்தாராவின் வாழ்க்கை வரலாறு ஆவணப் படமாக வெளிவந்தது.
இதில் தனுஷின் அனுமதியில்லாமல் நானும் ரௌடி தான் திரைப்பட பாடல் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக தனுஷ் குற்றம் சுமத்தியிருந்தார்.
இதற்கு நயன்தாரா அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் நயன்தாராவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தனுஷ் தரப்பு மனுத்தாக்கல் செய்தது.
இவ் வழக்கு இன்று வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
இவ் வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு தொடர்பில் பதிலளிக்க வேண்டும் என நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றம் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.
இந்த பதில் மனுக்களுக்கு தனுஷ் தரப்பிலிருந்தும் பதில் வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டதோடு, இவ் வழக்கில் இடைக்கால தடை கோரும் மனுவின் மீது ஜனவரி 08 ஆம் திகதி இறுதி விசாரணை மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளார்.