
சமந்தா வரிசையில் நயன்தாரா….ஒரு பாடலுக்கு குத்தாட்டம்
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தெரிந்தெடுத்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் நடித்துள்ள ராக்காயி, மண்ணாங்கட்டி டெஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது.
இவ்வாறிருக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் ராஜாசாப் எனும் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நயன்தாரா நடனமாட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இப் படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
சுமார் 350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இத் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நயன்தாரா நடனம் ஆட இருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
CATEGORIES சினிமா
