நேஷன்ஸ் லீக் – பிரான்ஸ் அணிக்கு அதிர்ச்சி தோல்வி

நேஷன்ஸ் லீக் தொடரில் குரோஷியாவுக்கு எதிரான போட்டியில் பிரான்ஸ் அணி அதிர்ச்சியூட்டும் தோல்வியைச் சந்தித்தது.
பிரான்ஸ் அணியின் தலைவர் கைலியன் எம்பாப்பே நீண்ட நாட்களுக்கு பின்னர் அணிக்கு திரும்பிய போதிலும் அந்த அணியால் வெற்றிபெற முடியவில்லை.
இந்தப் போட்டியில் 2-0 என்ற கணக்கில் பிரான்ஸ் அணி தோல்வியை சந்தித்துள்ளது.
போட்டியின் 26வது நிமிடத்தில் ஆன்டே புடிமிர் கோல் அடித்து குரோஷியா அணியை முன்னிலைப்படுத்தினார்.
தொடர்ந்து முதல் பாதி ஆட்டம் முடிவதற்கு சற்று முன்னர் விங்கர் இவான் பெர்சிக் அடித்த இரண்டாவது கோல், அவர்களின் வெற்றியை உறுதி செய்தது.
இரண்டாவது பாதியில் ஆட்டத்தில் பிரான்ஸ் அணி எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. இதனால் 2-0 என்ற கோல் கணக்கில் அந்த அணி தோல்வியை சந்தித்திருந்தது.
இந்நிலையில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இரண்டாவது லெக்கில் பிரான்ஸ் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.
நேஷன்ஸ் லீக்கில் பிரான்ஸ் அணி கடைசி மூன்று போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை.
ரியல் மாட்ரிட் அணிக்காக தனது முதல் சீசனில் 20 கோல்களை அடித்த எம்பாப்பே, ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு பிரெஞ்சு அணிக்குத் திரும்பிய போதிலும் அவரால் அணியை வெற்றிபாதைக்கு அழைத்துச் செல்லமுடியவில்லை.