ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் தேசிய மாநாடு

ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் தேசிய மாநாடு

ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் தேசிய மாநாடு கடந்த 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஹட்டன் நகரில் இடம்பெற்றது. கொட்டும் மழைக்கு மத்தியிலும் பெருமளவு மக்கள் இதில் கலந்துகொண்டனர்.

ஹட்டன் ஸ்ரீகிஷ்னபவான் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற மாநாடு காலை 9.30 தொடக்கம் மாலை 7 மணி வரை நடைபெற்றது. பாட்டாளி வர்க்க மக்கள் அனைவரும் இம் மாநாட்டில் பங்குபற்றியிருந்தனர்.

மாநாட்டு உரையை பொதுச் செயலாளர் இரா.ஜீவன் இராஜேந்திரன் நிகழ்த்தினார்.

மாநாட்டில் பாட்டாளி வர்க்கத்தின் பெண் தோழர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் மலையக கல்வி வளர்ச்சிக்கு பங்காற்றிய சிவனு அண்ணாசாமி, தொழிற்சங்க துறையில் 60 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றிய பதுளை ஆறுமுகம் முத்துலிங்கம் மாற்று அரசியல் சிந்தனை உள்ளிட்ட விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வரும் சிவனு இராஜேந்திரன், இலக்கியம் ஊடாக மலையக மாற்றத்துக்கான கருத்துக்களை உருவாக்கி வரும் சு.தவச்செல்வன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

இம் மாநாட்டின் மூலம் மலையகத்தில் மாற்று அரசியல் சிந்தனை மேலும் வளர்ச்சியடையும் என ஈரோஸ் ஜனநாயக தேசிய முன்னணி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Share This