நாமலின் சட்டக் கல்லூரிப் பட்டம் – புலனாய்வுத்துறையின் விசாரணைகள் ஆரம்பம்

இலங்கை சட்டக் கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பங்கேற்றது தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரணையைத் தொடங்கியுள்ளது.
‘Bostonlanka’ சமூக ஊடக வலையமைப்பில் ஒளிபரப்பான நேர்காணலில் நாமல் ராஜபக்சவின் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மேற்கோள் காட்டி, மோசடி, ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்கள் இயக்கம் சிஐடியில் அளித்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் இந்த விடயத்தை முழுமையாக விசாரிக்குமாறு பொலிஸ்மா அதிபர் சிஐடிக்கு உத்தரவிட்டுள்ளார்.