குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு நாமல் ராஜபக்சவுக்கு அழைப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவை நாளை (26) குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக நாமல் ராஜபக்ச இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.
எனினும், இதன்போது நாமல் ராஜபக்ச கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
எவ்வாறாயினும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கமானது தனது குடும்பத்தின் மீது அரசியல் பழிவாங்கல்களை மேற்கொண்டு வருவதாக பல இடங்களில் நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.