நாமல் ராஜபக்சவுக்கு கொலை மிரட்டல் – டி.வி. சானக குற்றச்சாட்டு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு தேசிய மக்கள் சக்தியின் பிரதி அமைச்சர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“நாங்கள் தொடர்ச்சியான அடக்குமுறைகளை கண்டுள்ளோம், தொடர்ச்சியான அச்சுறுத்தல்களைக் கண்டுள்ளோம்.” அரசாங்கத்தில் உள்ள ஒரு பிரதி அமைச்சர், எங்கள் கட்சித் தலைவர் நாமலிடம், கிராமத்திற்குச் சென்றால், குழிக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்று கூறுகிறார்.
உங்களுடைய இந்தப் பிரதி அமைச்சர், நாமல் ராஜபக்ச கிராமம் கிராமமாகச் சென்றால், அவர் நரகத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும் என்று கூறுகிறார்.
ஒருபுறம், நாட்டில் நடக்கும் அனைத்து பாதாள உலக நடவடிக்கைகளுக்கும் ராஜபக்ச குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. மறுபுறம், பிரதி அமைச்சர் நேரடியாக கொலை மிரட்டல் விடுத்து, குழிக்குள் செல்ல வேண்டியிருக்கும் என்று கூறுகிறார்.
இது பெலவத்தையில் இருந்து தீட்டப்பட்ட திட்டமா? இது நேற்று அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ச கிராமம் கிராமமாகச் செல்கிறாரா என்று ஊடகங்கள் கேள்வி எழுப்புகின்றன. பின்னர் அமைச்சர் கிராமத்திற்கு அல்ல, குழிக்குத்தான் போக வேண்டும் என்று கூறுகிறார்.
இவைதான் அச்சுறுத்தல்கள். ஜே.வி.பி.யின் பண்புகள் வெளிவருகின்றன.” என்றார்