தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை நாமல் எதிர்க்கவில்லை: மொட்டு கட்சி அறிவிப்பு

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை தமது கட்சி எதிர்க்கவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இன்று அறிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
“ பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டதை நாமல் ராஜபக்சவோ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியோ எதிர்க்கவில்லை. சிறுதேயிலை தோட்டங்களில் தொழில் செய்பவர்கள், காமன்ட்களில் வேலை செய்பவர்கள் உட்பட இந்நாட்டில் குறைந்த வருமானம் பெறுபவர்கள் உள்ளனர்.
இவர்களுக்கும் சம்பள உயர்வு அவசியம் என்றே வலியுறுத்துகின்றோம்.
வாக்குக்காக ஒரு குழுவை தெரிவு செய்யாமல் குறைந்த வருமானம் பெறும் அனைவருக்கும் சம்பள உயர்வு அவசியம் என்பதே எமது நிலைப்பாடாகும். அது தொடர்பான யோசனையை முன்வைக்கப்பட்டுள்ளது.” எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.
