தஹாம் சிறிசேனவிற்கு நாமல் எம்.பி அழைப்பு

தஹாம் சிறிசேனவிற்கு நாமல் எம்.பி அழைப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவை எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் தன்னுடன் இணைந்து பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய தேர்தல்களின் போதும் தஹாம் சிறிசேன ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பணியாற்ற அழைக்கப்பட்டார். வலுவான அரசியல் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதே இதன் நோக்கம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், இந்த அழைப்பை ஏற்றுக்கொள்வது அல்லது நிராகரிப்பது குறித்து தஹாம் சிறிசேன இன்னும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை, மேலும் எதிர்காலத்தில் அவர் இது குறித்து ஒரு முடிவை எடுப்பார் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில், சமீபத்தில் பத்தரமுல்லையில் உள்ள போர் வெற்றி கொண்டாட்ட நிகழ்வில் போர் வீரர்கள் அஞ்சலி நிகழ்வில் நாமலும், தஹாமும் ஒன்றாக அஞ்சலி செலுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Share This